காத்ரீனாவுக்கு ஆபரேஷன் -குணமடைந்து டிஸ்சார்ஜ்

ஆசியாவிலேயே செக்ஸியான நடிகை என புகழப்படும் கத்ரீனா கைஃப் கடந்த 2 வாரங்களுக்கு முன் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வந்தார். திடீரென ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்ததால், கத்ரீனா நேற்று முன்தினம் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார்.
ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் கத்ரீனாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications