பயருக்கும் தயார்-கீவ்னா

By Staff

Keevna
பயர், பண்டிட் குயின் போன்ற படங்களில் வந்த 'புரட்சிகரமான' பாத்திரங்கள் கிடைத்தால் வெளுத்துக் கட்டுவேன் என்கிறார் கவர்ச்சி நடிகை கீவ்னா.

பெயரைப் பார்த்தால் ஏதோ ரஷ்ய நடிகை நடிகையாக இருப்பாரோ என்றுதானே தோன்றுகிறது. அதுதான் இல்லை... பக்கா திருநெல்வேலி பொண்ணு. கிறிஸ்டினா என்று இயற்பெயர்.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர், இங்கிலாந்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சில காலம் டாக்ராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ஆனால் கலைதாகம் இவரை லண்டனில் தொடர்ந்து இருக்கவிடவில்லை. அங்கிருந்தபடியே நாடகங்களில் நடித்துள்ளார், மாடலிங் செய்துள்ளார்.

பிரபல இயக்குநர்கள் பரதன், மகேந்திரன் போன்றோர் இவரது தந்தை ஐசக்கிற்கு நெருங்கிய நண்பர்களாம். அவர்கள் மூலம் கிடைத்த தொடர்புகள் மற்றும் அவர்களின் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால், தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார்.

அப்படிக் கிடைத்த ஒரு வாய்ப்புதான் 'முதல் முதல் முதல் வரை'... (சுருக்கமாய்.. 'எம்3வி').

கிருஷ்ணா இயக்கிய முதல் படமான இந்த எம்3வியில் அதிரடியாக ஒரு பாடலுக்கு காமம் சொட்டும் கலக்கல் பாட்டுக்கு ஸ்ட்ரிப் நடனம் ஆடி, முதல் படத்திலேயே யார்றா இந்தப் பொண்ணு என கேட்க வைத்துவிட்டார்.

இந்தப் படத்தில் அவரது ரோலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்த பிறகு, இப்போதைக்கு லண்டன் செல்வதாக இல்லை என உறுதியாக உள்ளார் கீவ்னா.

இதோ அவரிடம் சில கேள்விகளும், அதற்கு அவர் அளித்த அதிரடி பதில்களும்:

பொதுவாக நடிக்க வரலேண்ணா டாக்டராகியிருப்பேன் என்பார்கள். நீங்கள் டாக்டராகி நடிக்க வந்திருக்கிறீர்கள். என்ன காரணம்...

இந்த நடிப்புத் தொழில் மீதுள்ள காதல்தான். எனக்கு நடிப்பது ரொம்பப் பிடிக்கும். எனக்கு சின்ன வயசுலேருந்தே தெரிந்தது சினிமா சினிமா சினிமாதான். ஐ ஜஸ்ட் லவ் திஸ் புரொபஷன்...

முதல் படத்திலேயே எதற்கும் தயார் என அறிவிப்பது போல அதிரடி கிளாமர் காட்டியிருப்பது ஏன்... இதே மாதிரி வேடங்களில் இனி தொடர்ந்து நடிப்பீர்களா...

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்த காரெக்டர் அப்படி இருந்தது. அதனால் அதிகபட்ச கிளாமர் காட்டினேன். ஆனால இதே மாதிரி வேடங்கள் அல்லது ஒற்றைப் பாட்டுக்கு ஆடுவதை விரும்பவில்லை. நல்ல ரோல்கள் கிடைக்க வேண்டும். அதே நேரம் மணிரத்னம், வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் கூப்பிட்டால் எந்த மாதிரி வேடமாக இருநதாலும் நடிப்பேன்.

பையர், பண்டிட் குயின் படங்ளில் கதாநாயகிகள் அதிகபட்ச நிர்வாணக் காட்சியில் தோன்றினார்கள். அப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பீர்களா...?

நிச்சயமாக. அந்த மாதிரி வேடங்கள் கிடைத்தால் வெளுத்துக் கட்டுவேன். நடிப்பில் புதிய பரிமாணம் கிடைக்கும் அந்த வாய்ப்பை நழுவ விட மாட்டேன்.

எம்3வியில் நிறைய இயக்குநர்களால் நி்ராகரிக்கப்படும் கதாநாயகியாக நடித்திருந்தீர்கள்... உங்கள் நிஜ வாழ்க்கைகையில் இத்தகைய நிராகரிப்புகள் உண்டா...?

நிச்சயமாக.. நம்மில் நிறையப் பேர் பலரால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான். அப்படிப்பட்ட நிராகரிப்புகள் எனக்கும் நடந்தன. ஆனால் அதை மட்டுமே நினைத்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது. அதைத் தாண்டி வந்ததால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, என்கிறார் கீவ்னா.

நல்ல படிப்பினை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X