மகேஷ் பூபதி - லாரா தத்தா திடீர் திருமணம்

இந்தத் திருமணத்துக்கு இருவரின் குடும்பத்தினரைத் தவிர வேறும் யாரும் அழைக்கப்படவில்லை. திருமணம் கூட வீட்டுக்கே பதிவாளர் வரவழைக்கப்பட்டு, அவர் முன்னிலையில் நடந்திருக்கிறது.
பிரபல மாடல் அழகி ஸ்வேதாதான் மகேஷ் பூபதியின் முதல் மனைவி. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்தானது. அடுத்த சில நாட்களில் அம்பலமானது பூபதி - லாரா தத்தா காதல்.
2010ம் ஆண்டு செப்டம்பரில் லாரா தத்தா - மகேஷ் பூபதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், இருவரும் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டனர்.
பாந்த்ராவில் உள்ள மகேஷ் பூபதி வீட்டுக்கு திருமண பதிவாளர் நேற்று அழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் லாரா தத்தாவும், மகேஷ் பூபதியும் மாலை மாற்றி, ஆவணத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்தனர்.
2 பேரின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. திருமண முடிந்த பிறகு தனது பிளாக்கில் 'திரு மற்றும் திருமதி பூபதியை சந்தியுங்கள்' என மகேஷ் பூபதி எழுதியதைத் தொடர்ந்தே, திருமணம் விவரம் வெளியுலகுக்கு தெரிந்தது.
புதுமண ஜோடி நேற்றிரவு கோவா புறப்பட்டு சென்றது. அங்கு வரும் 19ம் தேதி, தாஜ் அகுடாவில் உள்ள சன்செட் அவென்யூவில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.
அதன் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











