உடலை இன்சூர் செய்ய மல்லிகா ஷெராவத் விருப்பம்

இந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னி மல்லிகா ஷெராவத். சமீபகாலமாக இவரது படங்கள் ஹிட் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாலும், இவர் குறித்த செய்திகள் படு ஹீட்டாகத்தான் வருகின்றன.
இந்நிலையில் மல்லிகா ஷெராவத்துக்கு ஒரு திடீர் ஆசை. அது தனது மொத்த உடலையும் அப்படியே பல கோடிகளுக்கு இன்சூர் செய்ய வேண்டும் என்பதே.
இந்த ஆசைக்கு காரணம், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்களை ரூ. 700 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்ததே. அந்த செய்தியைப் படித்த நாள் முதலாகவே மல்லிகாவுக்கும் தனது பெரும் சொத்தான உடலை இன்சூர் செய்து காக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதாம்.
ஏற்கனவே ஹாலிவுட் ஸ்டாரான ஜெனீபர் லோபஸ், கால்பந்து ஸ்டார் டேவிட் பெக்காம் போன்றோரும் தங்களது முக்கிய உறுப்புகளை இன்சூர் செய்து வைத்திருப்பதால் தானும் அந்த வரிசையில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் மல்லிகா.
Comments
actress இன்சூரன்ஸ் உடல் ஜெனிபர் லோபஸ் நடிகை பாலிவுட் மல்லிகா ஷெராவத் ரொனால்டோ body bollywood insurance jenifer lopez mallika sherawat ronaldo


Click it and Unblock the Notifications