ஹோம்லியா-கிளாமரா? தெளிவாகி விட்டாராம் மோனிகா!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்படியே ஹீரோயினாக மாறியவர் மோனிகா. ஆரம்பத்தில் ஹோம்லியான கேரக்டர்களையே தேர்வு செய்தார். ஆனால் சிலந்தி வந்து மோனிகாவின் முகத்தை மாற்றி விட்டது.
அந்தப் படத்தில் அவர் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்ததால் அவரைத் தேடி அந்த மாதிரியான படங்களே நிறைய வந்தது. இதனால் குழம்பிப் போய் விட்டார் மோனிகா.
கிட்டத்தட்ட கவர்ச்சி நாயகி ரேஞ்சுக்கு அவரை மாற்றி வைத்து விட்டது சிலந்தி. ஆனால் அந்தப் படத்திற்குப் பின்னர் வந்த அ ஆ இ ஈ படத்தில் பாந்தமாக நடித்து அதில் அவருக்கு நிறையப் பாராட்டும் கிடைக்கவே ஓரளவு தெளிவானார் மோனிகா.
இப்போது முடிவே எடுத்து விட்டாராம் - இனிமேல் ஹோம்லியாக மட்டுமே நடிப்பது என்று.
ஹோம்லியாக நடிப்பதே சரியானது, பாதுகாப்பானது. அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் மோனிகா. மேலும் கன்னடத்திலும் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அத்தனையும் ஹோம்லி ரோல்களாம். இதனால் ஹோம்லியே சிறந்தது என்று தனக்குத் தானே தீர்ப்பு வழங்கிக் கொண்டு விட்டார் மோனிகா.
அருமையான முடிவுய்யா..!


Click it and Unblock the Notifications











