கற்றுத் தரும் நமீதா

கொஞ்ச காலத்திற்கு முன்பு நமீதா நடிக்க ஒத்துக் கொண்ட படம்தான் மாயா. ரொம்ப நாளாக ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள். எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் படத்தில் நமீதாவுக்கு 'ஜிலுஜிலுப்பான' ரோல் என்பது மட்டும் உறுதியாகி விட்டது.
காமரசம் சொட்டச் சொட்ட படத்தில் நடித்துள்ளாராம் நமீதா. வாத்சாயனி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நமீதா. காமக் கலைகளை கசடற கற்றுத் தரும் காதல் தேவதையாக வருகிறாராம் நமீதா.
மன்மதக் கலைகளை கற்றுத் தரும் ஆசிரியை வேடத்தில் வரும் நமீதா, படத்தில் படு தாராளம் காட்டி பயமுறுத்தியுள்ளார்.
நமீதா சம்பந்தப்பட்ட 'கச்சமுச்சா' காட்சிகளைப் படமாக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர், கேமராமேன் உள்ளிட்ட கொஞ்சம் பேர் மட்டுமே இருப்பார்களாம். படு பாதுகாப்போடு இந்த காட்சிகளைப் படமாக்கியுள்ளனராம்.
முன்பு ரேகா ஒரு இந்திப் படத்தில் இதுபோல காமக் கலைகளைக் கற்றுத் தரும் கேரக்டரில் நடித்துக் கலக்கியிருந்தார். அவருக்குப் பிறகு அந்தப் பெருமை நமீதாவுக்குக் கிடைத்துள்ளது.
மாயா - எல்லாம் மாயா!


Click it and Unblock the Notifications











