ஜகன் மோகினியில் நிலா!

விட்டலாச்சார்யா இயக்கி எண்பதுகளில் வெளியாகி தென்னகத்தைக் கலக்கிய அதே ஜகன்மோகினிதான் மேலும் கவர்ச்சி வண்ணம் பூசி புதிய ரீமேக்காக வெளிவருகிறது.
என்.கே.விஸ்வநாதன் இயக்கும் இப்படத்தின் நாயகி அதிரடி கவர்ச்சிக்கு சொந்தக்காரரான நமீதா. சமீபத்தில் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்துக்கு மத்தியில் மதுரையில் துவங்கிய இப்படத்தின் ஷூட்டிங் 'பேய்' வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. (ராம நாராயணனின் சீடரல்லவா படத்தை இயக்குபவர்!)
இதற்கிடையே ரசிகர்களைக் குஷிப்படுத்தும் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் என்.கே.விஸ்வநாதன்.
ஜகன்மோகினியில் இன்னொரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் நிலா. ஹீரோவின் மனைவி பாத்திரத்தில் நிலாவும், கவர்ச்சி மோகினியாக நமீதாவும் திரையை ஆக்கிரமிக்கப் போகிறார்கள்.
இசை- இளையராஜா. என்.கே.விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்த அத்தனை படங்களிலும் இசை விருந்து படைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கவர்ச்சி விருந்தோடு இசை விருந்தும் படைக்கவிருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!


Click it and Unblock the Notifications











