அய்யோ பாவம் பத்மப்ரியா!

By Staff

Padmapriya
அடடே என்று கொஞ்ச மாதங்களுக்கு முன்பு திரைத் துறையினரால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்ட பத்மப்ரியா இப்போது அடடா என்று கூறும் அளவுக்கு பரிதாபத்துக்குரியவராக மாறியுள்ளார்.

மிருகம் படத்தில் ஏற்பட்ட சலசலப்பு, இயக்குநர் சாமி கொடுத்த பளார், அதைத் தொடர்ந்து நடந்த வெளிநடப்பு என சில காலத்திற்கு முன்பு பெரும் சர்ச்சையில் சிக்கினார் பத்மப்பிரியா.

மதுரை பக்கம் நடந்த இந்த குழப்பத்திற்குப் பின்னர் சென்னைக்குத் திரும்பிய பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சிலில் சாமி மீது புகார் செய்ய, தயாரிப்பாளர் கவுன்சில் சாமிக்கு ரெட் கார்டு போட்டு விட்டது.

ஒரு வருடத் தடை என்ற தயாரிப்பாளர் கவுன்சிலின் தடை சாமியை ஒன்றும் செய்யவில்லை. அவர் படு ஹாயாக தனது அடுத்த படத்திற்கான அச்சாரத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பத்மப்ரியா நிலைதான் மோசமாகியுள்ளது. மிருகம் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து பலரும் பாராட்டியதால், கில்ட்டி ஆகி விட்டதாம் பத்மப்ரியாவுக்கு. தனது கோபத்தை மறந்து விட்டு சாமிக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தாராம்.

இந்த நிலையில் பத்மப்ரியாவுக்கு இப்போது கையில் படம் எதுவும் இல்லாத நிலை. புக் ஆன அர்ஜூன் படத்திலிருந்தும் தூக்கி விட்டனர்.

இப்போது தமிழில் சுத்தமாக படம் இல்லாத நிலையில் இருக்கும் பத்மப்ரியாவுக்கு மலையாளத்திலும் கூட திருப்தியான வாய்ப்புகள் இல்லையாம்.

மிருகம் பட சர்ச்சையைத் தொடர்ந்து அவரை புக் செய்ய இயக்குநர்கள் மத்தியிலும் பெரிய அளவில் ஆர்வம் இல்லையாம். இதனால் கிட்டத்தட்ட சுவற்றில் அடித்த பந்து நிலைமையில் உள்ளாராம் பத்மப்ரியா.

என்ன பண்ணலாம்? பத்மப்ரியாவோடு சேர்ந்து நாமளும் யோசிப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X