நிர்வாண கோலத்தில் நடித்தாரா வீணா மாலிக்?

இவர் ஏற்கனவே நிர்வாண கோலத்தில் இருப்பது போல 2001ல் ஒரு புகைப்படம் வெளியானது. ஆனால் அது நான் இல்லை என்று கூறி மறுத்து விட்டார் வீணா. அப்போது அதுகுறித்து அவர் கூறுகையில், நான் நிர்வாணமாக போஸ் கொடுத்ததே இல்லை. இந்தப் படம் குறித்து நான் கவலையே படவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஸ்லீஸ் என்ற இதழ், பல்வேறு ஆபாசப் படங்களில் வீணா மாலிக் நடித்துள்ளார் என்று பலமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அதுதொடர்பான படங்களையும் கூட அது அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.
அதேசமயம், வீணா மாலிக் ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்-ஆனால் இங்கல்ல வெளிநாடுகளில் என்று பாகிஸ்தான் இணையதளம் ஒன்று செய்தி வெலியிட்டுள்ளது.
வீணா மாலிக், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை அறிவதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம் வந்து விட்டது. இதனால்தான் அவரது கடந்த காலத்தை தோண்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன மீடியாக்கள்.
தற்போது வீணா மாலிக் குறித்த ஒரு வீடியோ இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு டச்சு நடிகருடன் படு நெருக்கமாக இருக்கிறார் வீணா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவற்கு முன்பு இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாம்.
இந்தப் படத்தில் படு நெருக்கமான, படுக்கை அறைக் காட்சிகளிலும் வீணா மாலிக் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகரின் பெயர் மெல்வின் என்று கூறப்படுகிறது.
தற்போது வீணா மாலிக் மும்பை அருகே உள்ள ஒரு பங்களாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தங்கியுள்ளார். அவர் வெளியே வந்த பிறகுதான் இந்தப் பட விவகாரம் குறித்த விளக்கத்தை அறிய முடியும்.


Click it and Unblock the Notifications











