ரோபோட்டில் ரஜினியுடன் பிரியாமணி?

அவர்களைச் சொல்லியும் பயனில்லை.
விருது வாங்கிவிட்ட மிதப்பில் இப்படி நடிக்க மாட்டேன், இந்த காஸ்ட்யூம் போட மாட்டேன், ஹீரோவுக்கு இணையா ரோல் வேணும் என்றெல்லாம் இம்சை அரசிகளாக மாறிவிடுவதுண்டு, சில விருது நடிகைகள்.
பிரியாமணி பரவாயில்லை... காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத் தெரிந்த புத்திசாலி. சோகத்தில் மூக்கை உறிஞ்சியபடி கண்ணீர் சிந்தும் வேடங்களை லாவகமாகத் தவிர்த்துவிட்டு, கமர்ஷியல் படங்களில் ஜஸ்ட் வந்து போனாலும் பரவாயில்லை என வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
அம்மணியின் இந்த துணிச்சலான முடிவுக்கு இப்போது ஒரு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது. ஆம்... தென்னக நாயகிகள் அனைவரும் யாருடன் ஒரு காட்சியிலாவது நடித்தால் போதும் எனத் தவம் கிடக்கிறார்களோ அந்த சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கனிந்து வந்திருக்கிறது.
விருது பெற்ற பிரியாமணிக்கு இயக்குநர் ஷங்கரிடமிருந்து ஒரு வாழ்த்துத் தந்தி சமீபத்தில் வந்தது. ஷங்கர் அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் வாழ்த்துத் தந்தி, அதுவும் நடிகைகளுக்கு அனுப்புகிற ரகமில்லை. இந்த தந்தியை வைத்தே ஏக பில்டப்புகளைக் கொடுக்கத் தயாராகிவிட்டது தமிழ் பத்திரிகையுலகம்.
ரோபோவில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் ஜோடி என்றாலும், ஒரு முக்கிய பாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கப்போவதாக இப்போதே பரபரப்பு செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.
இதுகுறித்து பிரியாமணியிடம் கேட்டால், தட்டிவிட்ட கோயில் மணி மாதிரி கலகலவென சிரிக்கிறார்.
"எப்படியோ தமிழ் மீடியா தயவில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லிவிடப் போகிறேன. ரஜினியுடன் ஒரு காட்சியில் வந்தாலும் நான் பாக்யசாலிதான். ஆனால் இதுவரை ஷங்கர் சார் என்னிடம் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. அவர் வாழ்த்துத் தந்தி அனுப்பியது மட்டும் உண்மை..." என்றார்.
இப்போ வாழ்த்துத் தந்தி, அப்புறம் வாய்ப்புத் தந்தியா!


Click it and Unblock the Notifications











