நான் அவன் இல்லை-2ல் சங்கீதா

ஹிதேஷ் ஜபக் தயாரித்து, செல்வா இயக்கி, ஜீவன், சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, ஜோதிர்மயி உள்ளிட்ட ஐந்து நாயகிகள் நடித்து வெளியாகி ஹிட் ஆன தமிழின் முதல் தமிழ் ரீமேக் படம் நான் அவன் இல்லை.
இப்படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை ரீமேக் செய்யும் நோய் தமிழ் சினிமாவை பீடித்துக் கொண்டது.
இந்த நிலையில் நான் அவன் இல்லை படத்தின் தொடர்ச்சியை எடுக்கவுள்ளார் செல்வா. ஹீரோ அதே ஜீவன்தான். ஆனால் ஐந்து நாயகிகள் மட்டும் வேறாம். ஜபக்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
நான் அவன் இல்லை படத்தின் தொடர்ச்சி, ஐரோப்பாவில் நடப்பதாக காட்டவுள்ளார் செல்வா. இப்படத்தில் நடிக்க சங்கீதாவை புக் செய்துள்ளனராம்.
திருமணத்திற்குப் பின்னர் சங்கீதா நடிக்கும் முதல் படம் இது.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில், நான் அவன் இல்லை தொடர்ச்சியில் நான் நடிப்பது உண்மைதான். கதை எனக்குப் பிடித்திருந்தது. நிச்சயம் இது வெற்றி பெறும்.
இப்போது தெலுங்கிலும் ஒரு படம் கையில் இருக்கிறது. குடும்பப் பாங்கான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். திருமணத்திற்கு முன்பும் கூட அப்படித்தான் நடித்தேன். தொடர்ந்து அப்படியே நடிப்பேன்.
உண்மையில் நான் நடிக்கக் கூடாது என்று கணவர் கிருஷ் என்னைத் தடுக்கவே இல்லை. அவருக்கும் கூட வாய்ப்புகள் வருகின்றன. இருப்பினும் நல்ல கதைக்காக காத்திருக்கிறோம் என்றார் சங்கீதா.


Click it and Unblock the Notifications











