விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்!

By Chakra

Saranya Mohan
ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சரண்யா மோகன்.

பொதுவாக தமிழ் சினிமாவுக்கும் தங்கை வேடங்களுக்கும் ஏழாம் பொருத்தம். ஒருமுறை தங்கை வேடத்தில் நடித்துவிட்டால், தொடர்ந்து அந்த வேடமே கேரியர் முழுக்க நிரந்தரமாகிவிடும்.

முன்னணி ஹீரோ படங்களில் தங்கை வேடங்களில் நடித்த பலரும் தங்கை, துண்டு துக்கடா வேடங்களுக்கென்றே முத்திரை குத்தப்பட்டுவிடுவார்கள்.

நித்யா, காவேரி, விஜி, வைஷ்ணவி... இப்படி பல 'தங்கைகள்' கோலிவுட்டில். அந்த வரிசையில் இப்போது வருபவர் சரண்யா மோகன்.

பஞ்சாமிர்தம், அஆஇஈ என சில விளங்காத படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், தங்கை வேடம் இவருக்கு புதிதல்ல. ஏற்கெனவே யாரடி நீ மோகினி, ஈரம் படங்களில் ஹீரோயினின் தங்கையாக வந்துள்ளார்.

இந்த முறை விஜய்க்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கதையின் பெரும்பகுதியில் சரண்யா வருவது போல காட்சிகள் உள்ளதாம்.

இதுபற்றி சரண்யா கூறுகையில், "விஜய்க்கு தங்கையாக நடிப்பதில் பெருமைதான். எனது வேடம் சிறப்பாக உள்ளது. விஜய்யுடன் நடிக்கும் போது கிடைக்கும் புகழும் ரீச்சும் என்னவென்பது புரிகிறது. அதனால்தான் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X