கவர்ச்சி மழையில் நூற்றுக்கு நூறு!

பாலச்சந்தரின் சிஷ்யர் செல்வா இயக்கும் இந்தப் படத்தில் ஸ்னேகா, கார்த்திகா, சந்தியா, கஸ்தூரி உள்பட 5 முன்னணி நாயகிகள் நடிக்கிறார்கள்.
ஜெய்சங்கர், லட்சுமி, வித்யா, விஜயலலிதா, ஜெய்குமாரி மற்றும் லலிதா நடித்த படம் நூற்றுக்கு நூறு. ஒரு ஹேண்ட்ஸம் லெக்சரரை 5 மாணவிகள் காதலிப்பதும் அதில் ஏற்பட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளும் லெக்சரர் அஏதிலிருந்து லாவகமாக வெளிவருவதும்தான் நூற்றுக்கு நூறு படத்தின் கதை.
கிளாமர் சமாச்சராரத்துக்கு ஏகப்பட்ட ஸ்கோப் உள்ள கதை என்பதால், கவர்ச்சி ஏரியாவில் அதகளம் பண்ணி வசூலை அள்ளிவிடும் நோக்கத்தோடு, அந்தக் கதையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர் செல்வா. இதே பாணியில் இவர் இயக்கிய நான் அவனில்லை, தரத்தில் சுமாராக இருந்தாலும், கவர்ச்சி மசாலா கொஞ்சம் தூக்கலாக இருந்ததால் நல்ல காசு பார்த்தது.
இந்தப் படத்திலும் 5 நாயகிகளை வைத்து எடுக்கிறீர்களே... நடிகைகளின் கவர்ச்சிதான் இந்தப் படத்தின் மூலதனமா? என்று கேட்டதற்கு, 'நான் கவர்ச்சியை வலியத் திணிக்கவில்லை. அதே சமயம், இந்தக் கதை அதற்கு நிறைய ஸ்கோப் உள்ள கதை. ரசிகர்களுக்கும் அது பிடிக்கும் என்பதால் இதே டெக்னிக்கைத் தொடர்கிறேன். அதில் என்ன தவறு?' என்றார்.
சரி, 5 நாயகிகள் ஒரே படத்தில் நடிப்பதால் பிரச்சினை வராதா?
சான்ஸே இல்லே. இந்த விஷயத்தில் நான் ஏற்கெனவே அனுபவசாலி. நான் அவனில்லை படத்தில் 5 நாயகிகளை வைத்து இயக்கினேன். 5 பேருக்கும் பாரபட்சம் இல்லாமல் காட்சிகளை வைத்துவிட்டால் ஏன் பிரச்சினை வரப்போகிறது என்றார் செல்வா.
நூற்றுக்கு நூறு படத்தை பாச்சந்தரே தனது கவிதாலயா நிறுவனத்துக்காக தயாரிக்கிறார். உன்னாலே உன்னாலே வினய்தான் ஹீரோ.
திரையை 5 ஹீரோயின்கள் பங்கிட்டுக் கொண்டது போக, மிச்சமுள்ள இடங்களில் தலைகாட்டுவார் போலிருக்கிறது.


Click it and Unblock the Notifications











