இனி குடும்பப்பாங்கினி வேடமே வேண்டாம்!: ஷீலா

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர் ஷீலா. பின்னர் இளவட்டம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக மாறினார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துவருகிறார்.
ஆனால் தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்து வருவதால், நல்ல சம்பளம் கிடைக்கக் கூடிய கமர்ஷியல் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறதாம்.
இந்த குடும்பப்பாங்கினி வேடங்களைக் கட்டிக் கொண்டு அழுவதை விட, இனி ரெண்டு கச்சையைக் கட்டிக் கொண்டு கல்லா நிரப்பலாம் என முடிவு செய்துவிட்ட ஷீலா, அதை பத்திரிகைகள் மூலமும் பற்ற வைத்துள்ளார்.
புதிதாக தான் செய்யவிருக்கும் கிளாமர் சேவை குறித்து அவர் கூறியதாவது:
இதுவரை நான் பணியாற்றிய படங்களில் அதிக கிளாமராக நடித்ததில்லை. பாவாடை தாவணி, சேலை என்று சராசரி பெண்ணாகவே நடித்துவிட்டேன்.
தமிழ் ரசிகர்களும் நம்ம வீட்டுப் பெண்ணாகவே என்னை நினைப்பதால் கிளாமராக நடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் இது பல வகையிலும் எனக்கு நஷ்டம்தான். இப்படி ஹோம்லியாக நடிப்பதால் பெயர்தான் கிடைக்கிறது. பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது.
அதனால் இந்த இமேஜ் வட்டமே வேண்டாம் என்று கொஞ்சம் கிளாமராக நடிக்க முடிவு செய்தேன். முதலில் அந்த வாய்ப்பு 'மஸ்கா' என்ற தெலுங்குப் படத்தில் வந்தது. பயன்படுத்திக் கொண்டேன்.
கேரக்டருக்கு தேவையான அளவுக்கு, ஆனால் பார்ப்பவர்கள் ஷீலாவா இது என ஆச்சர்யப்படும் அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். தமிழிலும் வாய்ப்பு வந்தால் அப்படி நடிப்பேன் என்கிறார் ஷீலா.


Click it and Unblock the Notifications











