ஹாலிவுட் ட்ரைலரில் ஷ்ரியாவின் 'லிப்லாக்' காட்சிகள்!

அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில், ஜெஸ்ஸி மெட்கேப் நடிக்கும் இந்தப் படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தில் மும்பை கால் சென்டரில் பணியாற்றும் இந்தியப் பெண் ப்ரியாவாக நடித்துள்ளார் ஷ்ரியா.
மெட்கேப்புடன் எக்கச்சக்க லிப் டு லிப் காட்சியிலும் அசத்தியிருக்கிறாராம் ஷ்ரியா. டிரைலரிலேயே அந்த முத்தக் காட்சிகளையும் காட்டி சூடேற்றியிருக்கிறாராம் இயக்குநர்.
இந்தப் படம் முடிந்து விட்டதால், இப்போது முழுக் கவனத்தையும் தனது அடுத்த மெகா படங்களான மர்மயோகி மற்றும் ஜக்குபாயில் காட்டத் தொடங்கியுள்ளாராம் ஷ்ரியா.
ஹாலிவுட்டுக்கு காட்டிய சலுகையை கோலிவுட்டுக்கும் காட்டுவாரா அம்மணி?
Comments


Click it and Unblock the Notifications