twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவுக்கு டிசம்பர் - நமீதாவுக்கு பொங்கல்!

    By Staff
    |

    Namitha
    சிம்புவின் சிலம்பாட்டம் டிசம்பருக்குத் திரைக்கு வருகிறது. அதேபோல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இன்னொரு படமான ஜெகன்மோகனி ரீமேக் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

    சிம்புவே நிறைய எதிர்பார்த்திருக்கும் படம் சிலம்பாட்டம். வித்தியாசமான கதைக் களத்தின் பின்னணியில், சனா கான், சினேகா என இரு நாயகிகளுடன், கேமராமேன் சரவணனின் கன்னி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் சிலம்பாட்டம்.

    இப்படத்தில் சிம்புவுக்காக முதல் முறையாக இசைஞானி இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளார் - யுவன் ஷங்கர் ராஜா இசையில்.

    விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சிலம்பாட்டம் டிசம்பர் 2வது வாரத்தில் திரையை எட்டிப் பார்க்கவுள்ளதாக தெரிகிறது.

    இதேபோல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இன்னொரு படம் ஜெகன்மோகினி. அந்தக் காலத்தில் ஜெயமாலினியின் ஜைஜான்டிக் கவர்ச்சி மற்றும் திகில் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் ஜெகன்மோகினி. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படம் குறித்த அலைதான் அப்போது. குடும்பம் குடும்பமாக போய்ப் பார்த்து பயந்தார்கள்.

    அந்தப் படத்தைத்தான் இப்போது நமீதாவின் நடிப்பில் மற்றும் மிரட்டலில் ரீமேக் செய்துள்ளனர். நிலாவும் இருக்கிறார் படத்தில்.

    இந்தப் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. அதே பொங்கலுக்குத்தான் பாலாவின் நான் கடவுளும் வருகிறது.

    இப்படி ரசிகர்களுக்கு விருந்து படைக்க அடுத்தடுத்து அல்வா போல சூப்பர் படங்கள் வருவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு திரைப் பிரியர்களுக்கு நல்ல தீனி என்பதில் சந்தேகம் இல்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X