ஒருவர் 'புஸ்ஸ்ஸ்'-ஒருவர் 'உஸ்ஸ்ஸ்'!

By Sudha

தமிழ் சினிமா நாயகிகள் இருவருக்கு ஒரு பிரச்சினை. ஒருவர் கணக்கே இல்லாமல் குண்டாகி வருகிறாராம். இன்னொருவரோ படு வேகமாக மெலிந்து கொண்டிருக்கிறாராம்.

நடிகைகளுக்கும் சரி, நடிகர்களுக்கும் சரி நடிப்பை விட மிக முக்கியமானது உடல் வாகும், பொலிவும், மெலிவும்தான். நடிகர்களுக்குக் கூட உடல் எடை கூடல் பெரிய பிரச்சினையாக கருதப்படுவதில்லை. பிரபு ரொம்ப காலமாக பெரிய சைஸ் உடலுடன் ஹீரோவாக உலா வந்து கொண்டிருந்தார். ஆனால் நடிகைகளுக்கு இடுப்பில் 'டயர்' கூடி விட்டால் அவர்களுக்கு மார்க்கெட் இறங்கி விடும்.

சைஸ் ஜீரோ ரேஞ்சுக்கு இன்று பல நாயகிகள் போய்க் கொண்டிருக்கின்றனர். காரணம், மெல்லிடையாளாக இருந்தால்தான் அழகு என்ற புது இலக்கணம். பாலிவுட்டில் இது ரொம்பப் பிரபலம். தமிழ் சினிமாவில் தமன்னா, ஷ்ரியா போன்றோர் சைஸ் ஜீரோவை அதிகம் நேசிப்பவர்கள்.

இப்படி உடல் அழகை கட்டுக்குள் வைக்க ஹீரோயின்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பூனம் பாஜ்வாவோ அது குறித்து சற்றும் கவலைப்படாமல் இருக்கிறாராம். அவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை இதுகுறித்து அவரும் கவலைப்படவில்லையாம். நான்தான் நடித்தாக வேண்டும் என்று விரும்பினால் என்னை அணுகட்டும். நானாகப் போய் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன், எந்த ஹீரோவின் ரெக்கமன்டேஷனையும் வேண்டி விரும்பி நிற்க மாட்டேன் என்கிறார் படு கூலாக.

இதன் விளைவு வீட்டில் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறாராம். இதனால் உடல் எடை தாறுமாறாக கூடிப் போய் விட்டதாம். அதுகுறித்தும் அவர் கவலைப்படவில்லையாம். கூடிய எடையைக் குறைக்க எனக்குத் தெரியுமே என்கிறார் இன்னும் கூலாக.

இவர் இப்படி என்றால் பூர்ணாவோ படு வேகமாக மெலியத் தொடங்கியுள்ளாராம். கை நிறையப் படங்களை ஒப்புக் கொண்டிருப்பதால் ஓய்வு ஒழிச்சலின்றி சேவை செய்ய வேண்டியுள்ளதாம். இதனால் சரியான நேரத்திற்கு, சரியான சாப்பாட்டை சாப்பிட முடியாமல் உடல் எடை குறையத் தொடங்கியுள்ளதாம்.

இவர்களைப் பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் குசுகுசுவென பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X