'லொட லொட' சனுஷா!

ரேணிகுண்டாதன் சனுஷாவுக்கு முதல் தமிழ்ப் படம். இப்படத்தில் வாய் பேச முடியாத ஊமைப் பெண்ணாக நடித்திருந்தார். இப்போது அவர் நடித்து வரும் படம்தான் நந்தி. இதில் இவரது பேச்சு பெரும் பேச்சாக இருக்குமாம். அதாவது படு வாயாடிப் பெண்ணாக நடித்துள்ளாராம் சனுஷா. துடுக்குத்தனமான கேரக்டரில் நடித்துள்ள சனுஷாவுக்கு இப்படம் நல்ல களம் அமைத்துத் தரும் என்கிறார் இயக்குநர் தமிழ்வாணன்.
இவர் ஏற்னவே கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.ஜே.சூர்யாவின் முன்னாள் உதவியாளர்.
நந்தி படத்தில் வால்மீகி, கல்லூரி பட நாயகன் அகில் நாயனாக நடிக்கிறார். வெட்டித்தனமாக ஊரைச் சுற்றும் இளைஞர்கள் கதையாம். படம் முழுக்க ராமநாதபுரத்தில் வைத்து வளர்ந்துள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications