உருமி படத்துக்காக ஒரு பாடலுக்கு ஆடுகிறாராம் தபு.

தனுஷின் மாமியாராக மாப்பி்ள்ளை படத்தில் நடிக்க அவரை அணுகினர். ஆனாலும், தனது கேரக்டரை ஜஸ்ட் வில்லியாக மட்டுமே காட்டி கதை இருந்ததால் அதை மறுத்து விட்டார். இதையடுத்து அந்த ரோலில் மனீஷா கொய்ராலா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் உருமி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்துள்ளார் தபு. தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம் உருமி. சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.
தனது நண்பர் என்பதோடு, இந்தியாவின் முன்னணி திரைக் கலைஞர் என்பதாலும்தான் உருமி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்டாராம் தபு. அதை விட இந்தப் பாடல், கதையுடன் கூடியது என்பதும், கதைக்கு முக்கியமானது என்பதும் கூட இப்பாடலுக்கு நடனம் ஆட தபுவை சம்மதிக்க வைத்ததாம்.
Comments


Click it and Unblock the Notifications