த்ரிஷா நடிக்க, தெலுங்கிலும் தயாராகிறது பாடிகார்ட்!
மலையாளம் பரவாயில்லை என்ற அளவுக்குத்தான் ஓடியது சித்திக் இயக்கிய பாடிகார்ட் படம். ஆனால் அந்தப் படத்தை தமிழில் விஜய்யை வைத்து ஹிட்டாக்கிய சித்திக், இப்போது அதையே இந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்கிறார்.
இந்தியில் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகும் இந்தப் படத்தில் சல்மான்கான் - கரீனா கபூர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இப்போது இதனை தெலுங்கிலும் இயக்குகிறார் சித்திக். இங்கும் பாடிகார்ட் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோவாக வெங்கடேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.
மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் இந்த வேடத்தைச் செய்தது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், பாடிகார்ட் படத்தில் நடிப்பது உண்மைதான். வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் ஆரம்பமாகிறது. படத்தின் டிவிடியை பார்த்தேன். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. தெலுங்கில் நிச்சயம் பெரிய வெற்றி பெறும், என்றார்.


Click it and Unblock the Notifications











