வெளிநாட்டு இந்தியரை மணக்கிறார் கார்த்திகா!

By Staff

Karthiga
சரத்குமார் ஜோடியாக நம்நாடு படத்தில் நடித்த நடிகை கார்த்திகாவுக்கு இப்போது கல்யாண யோகம்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் மஞ்சு வாரியர், திவ்யா உன்னி, சம்யுக்தா, நித்யாதாஸ், நந்தனா, கோபிகா போன்றவர்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டனர்.

அந்த வரிசையில் இப்போது கார்த்திகாவும் சேர்ந்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை மணக்கும் கார்த்திகாவுக்கு, போன வாரம்தான் கேரளாவில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இப்போது புலன் விசாரணை -2, திண்டுக்கல் சாரதி, நாளை நமதே, ஆறுமனமே ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்திகா.

இந்தப் படங்களை முடித்துக் கொடுத்த கையோடு கல்யாணத் தேதி அறிவிக்கப் போகிறார்களாம்.

திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு காலத்தே நடக்க வேண்டிய இனிய விஷயம். எனக்கும் உரிய நேரத்தில் வாய்த்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. இது காதல் திருமணமல்ல. பெற்றோர் பார்த்து திருப்திப்பட்ட பிறகே இந்த திருமணம்.

அவர் வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். திருமணத்துக்குப் பின் நடிப்பது குறித்து அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் நான்தான் திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன் என்கிறார் கார்த்திகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X