இயக்குநர் சொல்வதைத் தட்டாமல் கேட்பேன்-அர்ச்சனா கவி

தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம் கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்துள்ளார். அவர் அர்ச்சனா கவி.
மலையாளத்தில் வெளியான நீலத்தாமரை படத்தில் நடித்து அறிமுகமானவர் அர்ச்சனா. பின்னர் மம்மியும், ஞானும் என்ற படத்தில் ஊர்வசியின் மகளாக நடித்து பெயர் வாங்கினார்.
இவருக்குச் சொந்த ஊர் கண்ணனூர். அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.
பொண்ணு கேரளாவாக இருந்தாலும், டெல்லியில் வளர்ந்தவராம். இதனால் மலையாளம் தவிர இந்தியும் நன்றாக தெரிகிறது. கவர்ச்சியாக நடிப்பீர்களா என்ற பாரம்பரியமான கேள்வியை அவரிடம் கேட்டால், இதையே ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு நடிகை என்று வந்து விட்டால் இயக்குநர் சொல்படி நடிக்க வேண்டும். காட்சிக்கேறப நடித்தால்தான் சரியாக இருக்கும்.
கவர்ச்சிகரமாக நடிப்பதும் கூட நடிப்பில் ஒரு அங்கம்தான். பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்கிறார் படு இயல்பாக.
தமன்னாக்களே கொஞ்சம் உஷாரவே இருந்துக்கோங்க!


Click it and Unblock the Notifications











