நடிகை பாரதி ஆள் வைத்து தாக்கியதாக மேனேஜர் புகார்

அம்முவாகிய நான் பட நாயகி பாரதியும், அவரது அடியாட்களும் தன்னை சரமாரியாக அடித்து உதைத்ததாக அவரது மேனேஜர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அம்முவாகிய நான் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பாரதி. பின்னர் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் நடித்தார். தற்போது சற்று முன் கிடைத்த தகவல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், பாரதிக்கும், அவரது மேனேஜர் தணிகைவேலுக்கும் திருமணமானதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பாரதியிடம் மேனேஜராக இருந்து வரும் வேல்ராஜா என்பவர், தன்னை பாரதியும், அவரது அடியாட்களும், மேனேஜர் தணிகவேலும் சேர்ந்து அடித்து உதைத்ததாக வளசரவாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வேல்ராஜா கொடுத்துள்ள புகாரில், நான் பாரதியிடம் மேனேஜராக இருந்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு தணிகைவேல் எனக்கு அறிமுகமானார்.
எனது திருமணத்துக்காக தணிகைவேல் ரூ. 75 ஆயிரம் கடன் கொடுத்தார். கல்யாணத்தின்போது தணிகைவேல் வந்திருந்தார். அப்போது அவரை, பாரதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை நான்தான் பரப்பினேன் என்று பாரதியும், தணிகைவேலும் சந்தேகப்பட்டனர்.
இந்த நிலையில் பாரதி வீட்டுக்கு என்னை ஒருவர் அழைத்துச் சென்றார். அங்கு பாரதியும், அவருடன் இருந்த அடியாட்களும், இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கினர். பாரதியும் தாக்கினார். அப்போது தணிகைவேலும் அங்குதான் இருந்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு என்னை இறக்கி விட்டுப் போய் விட்டனர். நான் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வேல்ராஜா.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











