படங்கள் தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் 'விவரமான' பேச்சு

By Shankar

திரையுலகில் படங்கள் தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான். அடுத்தடுத்த படங்களில் சீண்ட ஆளின்றிப் போகிறார்கள், என்கிறார் அனுஷ்கா வருத்தத்தோடு.

அருந்ததி மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. வேட்டைக்காரன், சிங்கம் படங்களில் நடித்துள்ளார். இப்போது விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ்ப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, தனது அடுத்த படத்துக்காக ஹைதராபாத் போன அனுஷ்கா அளித்த பேட்டி:

படப்பிடிப்பை விட்டு வெளியே வந்ததும் நான் சினிமாவை மறந்துவிடுவேன். இல்லாவிட்டால் என்னைப் போன்ற நடிகைகளுக்கு நிம்மதியே இருக்காது.

சினிமா வேறு, நிஜம் வேறு. நடிகைகள் வீட்டில் போய் சினிமா பற்றி பேசக்கூடாது. ஷூட்டிங்குக்கு வரும்போது வீட்டை மறந்து விட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

நான் சினிமாவில் அறிமுகமானபோது பெற்றோரும் படப்பிடிப்புக்கு வந்தனர். அவர்கள் முன்னாள் சிறப்பாக நடிக்க முடியவில்லை. இதனால் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் கஷ்டம். எனக்கும் சங்கடம். அதனால்தான் இனி யாரும் ஷூட்டிங்குக்கு என்னுடன் வரக்கூடாது என்று தடுத்து விட்டேன்.

எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. தரமான படங்களில் நடிப்பதுதான் முக்கியம். நான் ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படம் போல் பாவித்துதான் நடிக்கிறேன்.

படங்கள் வெற்றி பெற்றால் கதாநாயகிகள் தொடர்ந்து சினிமா துறையில் இருக்க முடியும். தோற்றால் முதல் பலியே ஹீரோயினை சீண்டக் கூட ஆளிருக்காது. இதைப் புரிந்து கொண்டு படங்களை ஒப்புக் கொள்ள வேண்டும்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X