தேவதாசி வேடத்தில் மோனிகா!

By Sudha

Monica Bedi
ஆந்திர தேவதாசிகளின் வாழ்க்கை குறித்த படத்தில் தேவதாசி வேடத்தில் நடித்துள்ளார் மோனிகா பேடி.

அபு சலேமின் காதலியாக இருந்து அவருடன் சேர்த்து போர்ச்சுகல் நாட்டில் வைத்து பிடிபட்டவர் மோனிகா பேடி. இந்தி திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த மோனிகா பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து மீண்டு வெளியே வந்துள்ள அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் அவர் நடித்த முதல் படம் தேவதாசியின் கதை. இது ஒரு மொழி மாற்றுப் படமாகும். தமிழில் இப்படம் வருகிறது. ஆந்திர மாநிலத்து தேவதாசிகளின் கதையை சித்தரிக்கும் படம் இது. இதில் தேவதாசியாக நடித்துள்ளார் மோனிகா. அவருடன் ஸ்வாதி வர்மா நடித்துள்ளார்.

படத்தை இயக்கியிருப்பவர் கெளதம். இதுகுறித்து அவர் கூறுகையில் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார் மோனிகா. தமிழில் இப்படம் உருவாகியுள்ளது. மோனிகா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது.

சென்னையில் படமாக்குவதில் சில சங்கடங்கள் இருந்ததால், நான் மும்பையில் வைத்தே மோனிகா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினேன். இந்தி மற்றும் தெலுங்கிலும் இது டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

பெத்தாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேவதாசிகளின் கதை இது. இதற்காக அந்த ஊருக்கு சென்று பல்வேறு ஆய்வுகளைச் செய்து திரைக்கதையை அமைத்தேன் என்கிறார் கெளதம்.

தெலுங்கில் தேவதாசினி என்ற பெயரிலும், இந்தியில் பெத்தாபுரம் தேவதாசி என்ற பெயரிலும் வெளியாகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X