ரஜினி எனது கையைக் குலுக்கிப் பாராட்டினார்-தபசீ புளகாங்கிதம்

By Chakra

ஆடுகளம் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் எனது கையைக் குலுக்கி 'குட் ஜாப்' என்று பாராட்டினார் என்று புளகாங்கிதத்துடன் கூறியுள்ளார் ஆடுகளம் பட நாயகி தபசீ.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், தபசீ நடித்துள்ள படம் ஆடுகளம். பொங்கலுக்கு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தன்னை ரஜினி பாராட்டியது குறித்து தபசீ புளகாங்கிதப்பட்டுக் கூறியதாவது...

எனக்கு பொங்கல் என்றால் என்னவென்றே தெரியாது. எனக்கும், பொங்கலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தமிழும் சுத்தமாக தெரியாது. இருப்பினும் இந்த முறை பொங்கல் பண்டிகை எனக்கும் முக்கியமானதாகி விட்டது. காரணம், நான் நடித்த படம் தமிழில் வெளியாகியுள்ளதால்.

இப்படத்தை ரஜினிகாந்த் 2 முறை பார்த்தார். அவர் படம் பார்க்க வந்தபோது நானும் பிரிவியூ தியேட்டரில் இருந்தேன். இருப்பினும் அவருடன் அமர்ந்து படம் பார்க்க எனக்கு பதட்டமாக இருந்ததால் நான் வெளியே வந்து நின்று கொண்டேன். படம் முடிந்து வெளியே வந்த ரஜினி காந்த், என்னிடம் வந்து கையைக் குலுக்கி குட் ஜாப் என்று பாராட்டினார். இதை மறக்க முடியாது.

தற்போது தெலுங்கில் வஸ்தாது நா ராஜு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளேன்.

இந்தியில் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில்நடிக்க வாய்ப்பு வந்தது. பூரி ஜெகன்னாத் இயக்கும் படம் அது. ஆனால் பாலிவுட்டில் அவசரகதியில் நுழைய நான் விரும்பவில்லை. எனவே அப்படத்தை மறுத்து விட்டேன். மேலும் ஏப்ரல் மாதம் வரை எனது கால்ஷீட் புல்லாக உள்ளது. புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ள முடியாத நிலை. இருப்பினும் விரைவில் பாலிவுட்டிலும் நான் புகுவேன் என்கிறார் தபசீ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X