மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி.
திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம்.
இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை அவர் உலா விட்டுள்ளாக கேள்வி. இது இந்தி ரசிகர்களுக்கு மட்டும்தான். இதை தென்னிந்தியாவுக்கு அனுப்பி விடக் கூடாது என்ற அன்புக் கட்டளையுடன் இந்த கூல் ஸ்டில்களை கொடுத்துள்ளாராம் திரிஷா.
இப்போது திரிஷாவின் கவர்ச்சிகரமான ஸ்டில்கள் இந்தி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறதாம். வருகிற 21ம் தேதி திரிஷா நடித்த கட்டா மிட்டா படம் ரிலீஸாகிறது. அதற்கு முன்பு ரசிகர்களிடம் தன்னைப் பற்றிய பாசிட்டிவான உணர்வுகள் ஏற்பட வேண்டும் என்பதற்காவே இந்த ஸ்டில்களை திரிஷா உலா விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்து ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் எந்த ரேஞ்சுக்குப் போவார் திரிஷா என்று தெரியலையே...!


Click it and Unblock the Notifications











