விலகினார் அக்ஷயா

By Staff

Akshaya
ஜெயம் ரவியின் பேராண்மை படத்திலிருந்து இளம் நடிகை அக்ஷயா விலகி விட்டார்.

கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் சிம்ரனின் தங்கையாக நடித்து அறிமுகமானவர் அக்ஷயா. அதில் அவர் சரிவர அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால் கலாபக் காதலன் படத்தில் அக்கா புருஷன் மீது மோகம் கொண்ட பெண்ணாக வந்து கவர்ச்சி காட்டி
அனைவரையும் ஈர்த்தார்.

அதேபோல பழனியப்பா கல்லூரியிலும் கவர்ச்சிகரமாக நடித்திருந்தார். இந்த நிலையில் எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அக்ஷயா. படத்தில் ஜெயம் ரவிதான் நாயகன். அவருக்கு இப்படத்தில் ஐந்து ஜோடிகள். அவர்களில் ஒருவராக அக்ஷயா புக் ஆகியிருந்தார்.

இப்படத்தில் அக்ஷயாவை ஒப்பந்தம் செய்தபோதே, வேறு படத்தில் ஒப்பந்தமாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஒப்பந்தம் செய்திருந்தாராம் ஜனநாதன். முதலில் இதை ஏற்றுக் கொண்டார் அக்ஷயா. ஆனால் படப்பிடிப்பு முடிய 10 மாதங்களாகும் என்று தெரிய வந்தபோது குழப்பமாகி விட்டார்.

இதையடுத்து படத்திலிருந்து விலக முடிவு செய்து அதை ஜனநாதனிடமும் தெரிவித்து விட்டாராம்.

இதுகுறித்து அக்ஷயா கூறுகையில், நான் பேராண்மை படத்திலிருந்து விலகியுள்ளேன். 8 மாதங்கள் மொத்தமாக கால்ஷீட் தர வேண்டும் என இயக்குநர் கேட்டார். ஆனால் தற்போது தெலுங்குப் படம் ஒன்றிலும், 2 தமிழ்ப் படங்களிலும் நடித்துக் கொண்டுள்ளேன். இதுதவிர விக்ராந்த்துடன் ஒரு படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளேன்.

இயக்குநர் ஜனநாதனின் நிபந்தனைக்கு நான் கட்டுப்பட்டால் இத்தனை வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். பேராண்மை படம் என்னைப் போன்ற சிறிய நடிகைகளுக்குப் பெரிய வாய்ப்புதான். இருந்தாலும், ஒரு படத்திற்காக ஐந்து நல்ல படங்களை இழக்க நான் விரும்பவில்லை. எனவேதான் விலகி விட்டேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X