அனன்யா 'ஆப்சென்ட்' - சாந்தினிக்கு சான்ஸ்!

கேரளாவிலிருந்து வந்த அழகுச் சிட்டு அனன்யா. நாடோடிகள் மூலம் நாடறிய பிரபலமானவர். நடித்தது ஒரே படம் என்றாலும் அதற்குள் அனன்யாயவைப் பற்றி தவறான செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.
நாடோடிகளில் வெற்றி பெற்ற நிலையில், படித்துறை என்ற படத்தில் ஒப்பந்தமானார் அனன்யா. இப்படத்தை தயாரிப்பவர் நம்ம ஆர்யா. இளையராஜா இசையைக்கிறார். பாலாவிடம் உதவியாளராக இருந்த சுகா என்கிற சுரேஷ் கண்ணன் இயக்குகிறார்.
புதுமுகம் அபிஷேக் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் நாயகியாக புக் செய்யப்பட்டார் அனன்யா. ஆனால் நெல்லையில் படப்பிடிப்புத் தொடங்கியபோது அனன்யா வரவில்லையாம்.
இதனால் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர், அனன்யாவை நீக்கி விட்டாராம். அவருக்குப் பதில் தற்போது சாந்தினி என்ற புதுமுகம் புக் ஆகியுள்ளார்.
அனன்யா, அதுக்குள்ளயா..?
More from Filmibeat
ananya arya அனன்யா ஆர்யா சாந்தினி சினிமா தமிழ் நாடோடிகள் படித்துறை chandhini cinema nadodigal padithurai


Click it and Unblock the Notifications











