அஞ்சலியின் 'ஆயுதம்'

By Staff

Anjali with Sunder C
அஞ்சலியின் 'ஆயுதம்' கற்றது தமிழில் அடக்கம் ஒடுக்கமாக, அம்சமாக வந்து போன அஞ்சலி, ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி களேபரம் செய்திருக்கிறாராம்.

கற்றது தமிழில் அறிமுகமான அழகிய நடிகை அஞ்சலி. தாய்மொழி தெலுங்கானாலும், தமிழிலும் சுந்தரமாக பேசக் கூடிய வசீகர நடிகை.

முதல் படத்தில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த அஞ்சலி, அடுத்து நடிக்கும் ஆயுதம் செய்வோம் மூலம் நல்ல கவர்ச்சி நடிகை என்ற பெயரைத் தட்டிச் செல்ல முடிவு செய்துள்ளார் போலும்.

சண்டை படத்தைத் தொடர்ந்து அதிரடியாக சுந்தர்.சி. நடிக்கும் படம்தான் ஆயுதம் செய்வோம். அன்பை விட வலிமையான ஆயுதம் எதுவும் உலகில் இல்ைல என்பதை கூறும் படம்தான் இந்த ஆயுதம் செய்வோம். உதயன் இயக்குகிறார்.

அன்பாயுதம்தான் படத்தின் கதை என்றாலும், அஞ்சலியின் கவர்ச்சி ஆயுதமும் படத்திற்குப் பக்க பலமாக இருக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறாராம் அஞ்சலி. குறிப்பாக அவர் ஆடியுள்ள ஒரு குத்துப் பாட்டு இந்த ஆண்டின் இளமைத்துள்ளலாக அமையும் என்கிறது ஆயுதம் செய்வோம் யூனிட்.

முதல் படத்தில் நடிப்பில் காட்டிய சிரத்தையை விட இரண்டு மடங்கு அக்கறையை கவர்ச்சி காட்டுவதில் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் அஞ்சலி.

அஞ்சலி எடுத்துக் கொண்டுள்ள கவர்ச்சி ஆயுதம், கோலிவுட் போட்டியில் அவருக்கு கை கொடுக்குமா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X