கமல் படத்தில் அனுஜா அய்யர்!

சிவி என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் அனுஜா அய்யர். திகில் படமான இதில் ஆவி வேடத்தில் நடித்திருந்தார் அனுஜா.
இந்த கேரக்டர் ஓரளவு பேசப்பட்டது. இதையடுத்து முதல் முதல் முதல் வரை என்ற படத்தில் நடித்திருந்தார் அனுஜா. இது நகர்ப்புற இளைஞர், இளைஞிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இதையடுத்து பிருத்விராஜ், பிரியாமணி நடித்துள்ள நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்திலும் நடிக்க அவர் புக் ஆகியுள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன், மோகன்லால், வெங்கடேஷ் ஆகிய பிரபலங்களோடு கலக்கப் போகிறார் அனுஜா அய்யர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு பதிப்புகளிலும் அனுஜாவின் கேரக்டர் வருகிறதாம்.
படத்தில் பெண் நிருபராக வருகிறாராம் அனுஜா. விசேஷம் என்னவென்றால் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அனுஜாவே டப்பிங் பேசவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











