கிளாமருக்குப் பயந்த அனுயா

மும்பையிலிருந்து வந்துள்ள புதிய தென்றல் அனுயா. சிவா மனசுல சக்தி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் அனுயா.
மும்பையில் பிறந்து, புனேயில் படித்த அனுயாவுக்கு சின்ன வயதிலேயே சினிமா ஆசை இருந்ததாம். அப்பா, அம்மாவும் கூட ஓகே. பண்ணி விட்டனர்.
அவரது ஆசைப்படியே அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எல்லாமே கிளாமராக இருந்ததால் வேண்டாம்ப்பா சினிமாவே என்ற எண்ணத்திற்கு வந்தாராம்.
அந்த சமயத்தில்தான் வந்தது எஸ்.எம்.எஸ். கதையைக் கேட்டதுமே சட்டென மண்டையை ஆட்டி விட்டாராம். காரணம், படத்தில் தனது நிஜ கேரக்டரைப் பிரதிபலிப்பது போலவே கதையின் கேரக்டரும் இருந்ததால்தானாம்.
படு ஜாலியான அனுவபமாக அந்தப் படம் அமைந்தது என்கிறார் அனுயா. எல்லோரையும் போலவே அனுயாவுக்கும் சிம்ரனைத்தான் ரொம்பப் பிடிக்குமாம். அவர்தான் எனது மாடல் என்கிறார் அனுயா.
ஏன்யா அப்படி என்றால், அவர் கிளாமரிலும் அசத்தினார். நடிப்பிலும் கலக்கினார். இப்போதும் நடிக்கிறார். அதனால்தான் என்கிறார்.
தற்போது ஹரிக்குமாருடன் மதுரை சம்பவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அனுயா. நல்ல கதைதான் முக்கியம். அதற்காக கிளாமரே கூடாது என்றில்லை. தேவைப்பட்டால் (அதானே..) கிளாமராகவும் நடிப்பேன் என்கிறார் தமிழ் சினிமாவின் நாடியை அதற்குள் சரியாக கணித்து விட்ட அனுயா.
வெவரமாத்தாய்யா இருக்கு அனுயா..


Click it and Unblock the Notifications











