ஜிவி பிலிம்ஸ் படத்தில் ஆசின்

By Staff

Asin
கஜினியின் ரிலீஸை பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள ஆசின், ஜிவி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த இந்திப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் தமிழிலும் தயாரிக்கப்படவுள்ளது.

கஜினி மூலம் இந்தியில் காலெடி எடுத்து வைத்துள்ளார் ஆசின். படம் பக்காவாக ரெடியாகி விட்டது. உலகெங்கும் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இந்த ரிலீஸ், தனது இந்தி தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பதால் ஆசின் நகங்களை கடித்தபடி படு டென்ஷனாக காத்திருக்கிறார்.

தற்போது சல்மான் கானுடன் இணைந்து நடித்து வரும் ஆசின், அடுத்து ஜிவி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய தமிழ் மற்றும் இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழிலும் இப்படம் தயாராகிறது என்றாலும் இந்தியில் மட்டுமே ஹீரோயினாக நடிக்கிறாராம் ஆசின்.

ஆசினுக்கு இதில் ஜோடி ரன்பீர் கபூர். இது எந்திரன் டைப் அறிவியல் கதையாம்.

இதுகுறித்து ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெங்கட்ரமணி கூறுகையில், தமிழில் ஆர்யா ஹீரோவாக நடிக்கக் கூடும். அல்லது வேறு யாராவது இளம் நாயகர் ஒருவர் நடிக்கலாம்.

இந்தியில் ஆசினும், ரன்பீர் கபூரும் நடிக்கவுள்ளனர். தமிழ் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

எந்திரன் படத்தைப் போலவே இந்தப் படமும் அறிவியல் கதையைப் பின்னணியாகக் கொண்டதாக அமையும்.

இதுவிர நான்கு அனிமேஷன் படங்களையும் நாங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். சான்ட்ரா மீடியா என்ற பேனரில் இப்படங்கள் தயாரிக்கப்படும் என்றார் வெங்கட்ரமணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X