சிம்ரன் திரைக்கு மூடுவிழா

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்த வித்தியாசமான தொடர் சிம்ரன் திரை. பெரிய திரையின் பேரழகு நட்சத்திரமாக ஒரு காலத்தில் ஜொலித்த சிம்ரன் இந்தத் தொடரில் நடித்து வந்தார்.
மாதத்திற்கு ஒரு தொடர் என வித்தியாசமான தொடராக ஒளிபரப்பாகி வந்த சிம்ரன் திரை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. சிம்ரன் கால்ஷீட் கொடுக்காததால்தான் தொடரை நிறுத்தி விட்டனராம்.
வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின்னர் சினிமாவில் மீண்டும் சிம்ரனுக்கு கிராக்கி பிறந்துள்ளதாம். இதனால்தான் சின்னத் திரைக்கு குட்பை சொல்ல முடிவு செய்து விட்டாராம் சிம்ரன்.
சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், சின்னத்திரை தொடர் தயாரிப்பை நிறுத்தி விட்டது பிரமீட் சாய்மீரா நிறுவனம்.
தற்போது சிம்ரன் டிஎன் 09 4777 உள்பட 3 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சேவல் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்கள் ரிலீஸாகின. இதில் வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனின் கேரக்டர் பேசப்படுவதால் அவருக்கு மீண்டும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











