நயன்தாராவுக்கு வயது 30! மாலத்தீவில் கொண்டாடினார்!!

By Mayura Akilan

கவர்ச்சிப்புயல், இளசுகளின் கனவுக்கன்னி நயன்தாராவுக்கு இன்று தனது 30வது பிறந்த நாளை மாலத்தீவில் உள்ள பிரபல ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார். இதற்காகவே இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளுடன் மாலத்தீவு சென்றுவிட்டாராம்.

தமிழில் ஐயா படம் மூலம் 2005 ஆம் ஆண்டு அறிமுகமான இவருக்கு அப்படி ஒன்று சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கவில்லை. சந்திரமுகியில் ரஜினியுடன் ஜோடியாக நடித்தும் சூர்யா உடன் கஜினியில் இரண்டாவது நாயகியாகவே நடித்தார்.

சிவகாசி படத்தில் திடீரென்று ஒரு குத்துப்பாடலுக்கு ஆடினார். அவ்வளவுதானா நயன்தாரா என்றிருந்தவர்களுக்கு வல்லவன் மூலம் சிம்புவின் ஜோடியாக நடிப்பு வாய்ப்பு வந்தது.

காதல் கிசுகிசுக்கள்

காதல் கிசுகிசுக்கள்

சிம்பு உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சிம்பு உடனான அந்தரங்க புகைப்படம் வெளியாகவே அதே வேகத்தில் காதல் முறிவு என்று அறிவித்தார்.

பிரபுதேவாவின் காதல்

பிரபுதேவாவின் காதல்

தொடர்ந்து வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவா உடன் காதல் வயப்படவே திருமணம் வரை அந்த காதல் போனது. படத்தில் நடிக்கமாட்டேன் சீதையாக நடிப்பதுதான் கடைசி படம் என்று அறிவித்தார் நயன்தாரா. கடைசியில் அந்த காதலும் முறிந்து முடிவுக்கு வந்தது. காதல் கிசுகிசுக்கள், காதல் முறிவுகள் என நயன்தாரா பற்றிய செய்திகள் எப்பவுமே ஊடகங்களுக்கு ஹாட்டான கேக்தான்.

மீண்டு வந்த நயன்தாரா

மீண்டு வந்த நயன்தாரா

காதல் தோல்விகளில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த நயன்தாராவுக்கு வாய்ப்புகள் மழையாக கொட்டியது. ஆரம்பம், ராஜா ராணி, என அடுத்தடுத்த ஹிட் கொடுத்தார். அஜீத் தொடங்கி உதயநிதி ஸ்டாலின், ஜெய் வரை அனைவருடனும் நடிக்க தயார். கதை சரியா இருக்கா என்று மட்டும் பார்த்தார் நயன்தாரா.

மாஸ் ஹீரோக்கள் ஜோடி

மாஸ் ஹீரோக்கள் ஜோடி

இவர் தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக காஷ்மோரா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆக்சன் கதைகளில்

ஆக்சன் கதைகளில்

காதல் தோல்விக்குப் பிறகுதான், நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இளம் நடிகர்களிடமிருந்து வாய்ப்புகள் வந்தவண்ணமுள்ளதாம். இதைப் பயன்படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்டும் நயன்தாரா, இனி ஆக்ஷன் கதைகளுக்குத்தான் முன்னுரிமை என்கிறார்.

சம்பளத்தில் நம்பர் 1

சம்பளத்தில் நம்பர் 1

உதயநிதியுடன் ‘நண்பேண்டா, ஜெயம் ரவியுடன் பெயரிப்படாத ஒரு படம், சிம்புவுடன் இது நம்ம ஆளு என்று மூன்று நேரடித் தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, தமிழில் உருவாகும் இரண்டு படங்களிலும் நடித்துவருகிறார் நயன்தரா. இருமொழிப் படமென்றால் 1.20 கோடியும், தமிழ் மட்டும் என்றால் 1 கோடியும் சம்பளம் வாங்கும் நயன்தாரா, படங்களை நிதானமாக ஒப்புக்கொண்டு வருகிறார்.

இன்னும் மூன்றாண்டுகளுக்கு

இன்னும் மூன்றாண்டுகளுக்கு

நயன்தாரா சினிமா உலகிற்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. எத்தனையோ கதாநாயகிகள் வந்து போயுள்ளனர். நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகிவருகின்றனர். ஆனாலும் தற்போதைய நிலவரப்படி இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நயன்தாராதான் நம்பர் 1நீடிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X