ஒரிஜினலுக்கு மாறிய ஹேமமாலினி!

நடித்துக் கொண்டிருப்பது இரண்டு படங்களில், வெளியாகியிருப்பது ஒரு படத்தில். ஆனாலும், ஹேமமாலினி கோலிவுட்டில் படு வேகமாக ஹிட் ஆகி வருகிறார். காரணம், அவரது அமர்க்களமான அழகும், கவர்ச்சியும்.
இந்திர விழாவில் அவர் 2வது நாயகியாக நடித்துள்ளார். நமீதாவுக்கு இணையான அவரது அட்டகாச கவர்ச்சியும், அழகும், கோலிவுட்டில் அவருக்கு ஜோதிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்துவதாக கூறுகிறார்கள்.
தற்போது நான் அவன் இல்லை - 2 படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் ஹேமா. அதுதவிர சுந்தர்.சிக்கு ஜோடியாக குரு சிஷ்யனில் நடிக்கவுள்ளார்.
முதல் படமான இந்திர விழா தன்னை நல்ல மாதிரியாக அடையாளம் காட்டியுள்ளதாக கூறும் ஹேமமாலினி, கவர்ச்சி காட்டி நடிக்க தான் தயக்கமே காட்ட மாட்டேன் என்கிறார்.
நான் அவன் இல்லை படத்தில் படு கவர்ச்சிகரமாக வருகிறாராம். வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்கும், பிடிவாதம் பிடித்த பெண்ணாக வருகிறேன். ஸ்விம் சூட்டிலும் நடித்துள்ளேன்.
கவர்ச்சியாக நடிப்பதில் நான் தயங்குவதில்லை. தேவையில்லாமல் நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். தேவைப்பட்டால் தயங்க மாட்டேன் என்கிறார் எதார்த்தமாக.
ஹேமமாலினிக்கு தமிழ் சுத்தமாக தெரியாதாம், ஆங்கிலமும், இந்தியும் தான் தெரியுமாம். இருந்தாலும், இந்திர விழா படப்பிடிப்பின்போது இயக்குநர் ராஜேஷ்வர் ஒவ்வொன்றையும் அழகாகப் புரிய வைத்து நடிக்கச் சொன்னாராம்.
கோலிவுட்டில் தனது மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் குஷியில் உள்ள ஹேமமாலினி, சூட்டோடு சூடாக தனது பெயரையும் ஸ்ருதி பிரகாஷ் என மாற்றி விட்டார். இதுதான் அவரது உண்மையான பெயராம்.
ஒருவேளை தன்னை ஜெயமாலினி ரேஞ்சுக்கு மாற்றி விடுவார்கள் என்ற பயத்தில் பெயரை மாற்றி விட்டாரோ..!


Click it and Unblock the Notifications











