கோவாவில் பிறந்த நாள் கொண்டாடும் இலியானா

தேவதாசு படம் மூலம் அறிமுகமான 23 வயதாகும் இந்த கோவா அழகி, இன்றைய தேதிக்கு சூப்பர் ஸ்டார் படத்துக்கே கால்ஷீட் இல்லை என்று சொல்லும் அளவு மகா பிஸி. போக்கிரி, ஜல்சா என இவர் நடித்த தெலுங்குப் படங்கள் படு ஹிட்.
சமீபத்தில் இவர் நடித்த கிக் படம் பாக்ஸ் ஆபீஸ் பிளாக் பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்தது. அடுத்து சலீம், ரெச்சிப்போ ஆகிய படங்களில் நடித்து வரும் இலியானாவை எப்படியாவது தமிழுக்குக் கொண்டு வர படாத பாடு படுகிறார்கள் கோலிவுட் நிபுணர்கள். ஆனால் கேடி படத்தில் சூடுபோட்டுக் கொண்ட இலியானாவோ ரொம்...ப யோசிக்கிறார் தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்ள.
விஜய்யின் 50வது படம் உரிமைக்குரலில் இவரை நடிக்க வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இன்னும் முயற்சி அளவில்தான் உள்ளது.
தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் தனது பூர்வீக பூமியான கோவாவில் கொண்டாடுகிறாராம் இலியானா.


Click it and Unblock the Notifications











