இனி நோ ஐட்டம் டான்ஸ்- இஷா

விஜய்யுடன் தமிழில் நெஞ்சினிலே படத்தில் அறிமுகமானவர் இஷா கோபிகர். அதன் பிறகு காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நரசிம்மா என சில படங்களில் நடித்தவர் அப்படியே பாலிவுட் பக்கம் போய்விட்டார்.
சில பி கிரேடு பாலிவுட் படங்களில் நடித்த இஷா, இடையில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டார்.
கான்டே, கம்பெனி படங்களில் இவரது ஐட்டம் டான்ஸ் பேசப்பட்டது.
இப்போது ஒன் நைட் அட் கால் சென்டர் மற்றும் ஹலோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பெரிய வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தவருக்கு ஒற்றைப் பாடல் பாக்கியம் மட்டுமே கிடைத்த்தில் ஏமாந்து போன இஷா, இனி ஐட்டம் டான்ஸூக்கு பை சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டார்.
பத்து ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகலிலும் நடித்துவிட்டேன். எங்குமே திறமைக்குதான் மரியாதை. ஒரு பாடலுக்கு இனி ஆடக் கூடாது என முடிவு செய்ததற்குக் காரணம், ஐட்டம் டான்ஸ் மீது ஏற்பட்ட வெறுப்பல்ல.
இப்போது முன்பை விட மனம் பக்குவப்பட்டுள்ளது. யோகா, நிம்மதியான வாழ்க்கை முறை என வாழ்க்கை வேறு ஒரு தளத்துக்கு வந்துவிட்டது.
எனவேதான் போதும் இந்த ஒற்றை ஆட்ட வாழ்க்கை என்று முடிவு செய்தேன்.
தமிழில் எனக்கு படங்கள் இல்லாமல் போனதற்குக் காரணம் நான்தான். எத்தனையோ வாய்ப்புகள் இப்போதும் வருகின்றன. ஆனால் எனக்குப் பிடித்தமானவையாக அவை இல்லை, என்கிறார் இஷா.


Click it and Unblock the Notifications











