'மானாட' ரம்பா, 'மயிலாட' குஷ்பு!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஷோ, மானாட மயிலாட. டான்ஸ் மாஸ்டர் கலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் சமீபத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து 2ம் பாகம் தொடங்கவுள்ளது. முதல் பாகத்தில் நடுவர்களாக கலாவின் தங்கையும், டான்ஸ் மாஸ்டருமான பிருந்தாவும், முதலில் சிம்ரனும், பின்னர் நமீதாவும் நடுவர்களாகப் பணியாற்றினர்.
இந்த டான்ஸ் ஷோவை விட நமீதா போட்டு வந்த கவர்ச்சிகரமான டிரஸ்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சட்டசபை வரை போய் விட்டது நமீதா போட்ட டிரஸ்.
இந்த நிலையில் 2ம் பாகத்தில் நடுவர்கள் மாறியுள்ளனர். பிருந்தா சின்னதாக ஓய்வெடுத்துக் கொள்ளப் போய் விட்டார். எனவே அந்த இடத்திற்கு குஷ்பு வந்துள்ளார். அதேபோல நமீதாவும் கை நிறையப் படங்கள் இருப்பதால் என்னை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டாராம்.
இதனால் நமீதா இடத்திற்கு தொடையழகி ரம்பா வந்துள்ளார். முன்னாள் கவர்ச்சிக் கன்னியான ரம்பா, நமீதா இடத்திற்கு வந்திருப்பது பொருத்தமானதுதான்.
இனிமேல் கலாவுடன் இணைந்து குஷ்புவும், ரம்பாவும் நடுவர்களாகப் பணியாற்றுவார்கள்.
ரம்பாவுக்கு சுத்தமாக எங்குமே படம் இல்லை. வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவரை கலா அணுகி டான்ஸ் ஷோவுக்கு கூப்பிடவே, சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு விட்டாராம் ரம்பா.
முன்பு ஜெயா டிவியின் ஆஸ்தான தயாரிப்பாளராக, காம்பியராக இருந்து வந்த குஷ்பு, சமீபத்தில் கலைஞர் டிவிக்கு மாறினார். இப்போது கலைஞர் டிவியின் ஆஸ்தான கலைஞராக மாறி வருகிறார் என்பதையே இது காட்டுகிறது.
நமீதா கவர்ச்சி டிரஸ்ஸுக்குப் பெயர் போனவர் என்றால், குஷ்பு கவர்ச்சி ஜாக்கெட்டுக்குப் பெயர் பெற்றவர். ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் அவர் போட்டு வரும் ஜாக்கெட்டைப் பார்க்கவே ஒரு கூட்டம் டிவி முன்பு குவிந்து கிடக்கும்.
மானாட மயிலாட நிகழ்ச்சி குஷ்பு என்ன செய்து கலக்கப் போகிறாரோ?


Click it and Unblock the Notifications











