'சைதை சைலஜா' மும்தாஜ்!

இதுகுறித்து மும்தாஜ் கூறுகையில்,
நிறைய படங்கள் வருது. ஆனா நான்தான் சிங்கிள் டான்ஸெல்லாம் அவ்வளவா ஒத்துக்கிறதில்ல.
இப்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ராஜாதி ராஜா படத்தில் சைதை சைலஜா என்ற அரசியல்வாதியாக நடிக்கிறேன். நல்ல பவர்புல் வேடம். எனக்கும் லாரன்சுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் உள்ளன.
இந்தப் படத்தில் சில காட்சிகளில் நான் புகைப்பது போல வரும். காட்சிக்கு அவசியம் என்பதால் அதற்கு மறுப்பு சொல்லாமல் ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்திலும் என் சொந்தக் குரலில் பேசியிருக்கிறேன், எனும் மும்தாஜ், இப்போது அரசி, திக் திக் படங்களில் முழு கதாநாயகியாக நடிக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications