For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளத்திலும் மல்லுக் கட்டபோகும் நமீதா!

    By Staff
    |

    Namitha
    தமிழ் ரசிகர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கவர்ச்சி மோகினி நமீதா, மலையாள ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் 'அவ்விட நாட்டு'ப் படம் (நீங்க எதிர்பார்க்கிற மாதிரி படம் இல்லீங்ணா இது!) ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

    கலாபவன் மணிக்கு ஜோடியாக நமீதா நடிக்கும் இந்தப் படத்துக்கு பிளாக் ஸ்டாலின் என்று தலைப்பு வைததிருக்கிறார்கள்.

    இரட்டை இயக்குநர்களான பிரமோத் பப்பன் இப்படத்தை இயக்குகிறார்கள். சாதா தாராவாக இருந்த நயனதாராவை கவர்ச்சிப் புயலாக்கிய பெருமைக்குரிய இயக்குநர்கள் இவர்கள்தான். மம்முட்டி நடித்த தஷ்கரவீரன் படத்தில்தான் முதல்முதலாக படுகவர்ச்சியாக நடித்து அதிர வைத்தார் நயனதாரா.

    பிளாக் ஸ்டாலினில் நடிக்க நமீதாவுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறார்களாம். மலையாளத் திரையுல வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றுள்ள முதல் நடிகை நமீதாதான்.

    மலையாளத் திரையுலகில் பெரிய நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் கூட இன்னும் ரூ.50-60 லட்சங்கள்தான் வாங்குகிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X