துபாயில் நயன் பிறந்த நாள்!

By Staff

Nayanatara
இன்று நயனதாராவுக்கு 24 வயது பிறக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக தனது பிறந்த நாளை ஏதாவது ஒரு படத்தின் செட்டில் கொண்டாடி வந்த நயனதாரா இந்த ஆண்டுதான் குடும்பத்தோடு கொண்டாடுகிறாராம். அதுவும் இங்கல்ல... துபாயில் இருக்கும் தன் அண்ணன் மற்றும் உறவினர்களுடன்.

ஏன் இந்த திடீர் பிரேக்...

போன வருஷம் பில்லா தந்த மகிழ்ச்சி அலை ததும்ப, விடிய விடிய பிறந்த நாள் கொண்டாடிய நயனதாராவுக்கு இந்த முறை அப்படியொரு வாய்ப்புக் கிடைக்கவே இல்லை. அடுத்தடுத்து அடி... வரிசையாக 3 படங்கள் பப்படமாகி விட சோகதாராவாகிவிட்டார். லிங்குசாமியின் இயக்கத்தில் தயாராகவிருந்த புதிய படத்தில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாத நிலை.

இப்போது அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது பிரபுதேவாவைத்தான். வில்லு படத்தில் வழக்கமான கவர்ச்சிப் பதுமையாக வந்து போகாமல் கலகல காமெடியில் பின்னியிருக்கிறாராம் (சத்யம் படத்துக்கும் இப்படித்தான் ஏக பில்ட் அப் கொடுத்தார் அம்மணி!).

கோலிவுட் கவலைகளையெல்லாம் மறந்து ஒரு வாரம் துபாயிலேயே தங்கியிருக்கப் போகிறாராம் நயனதாரா!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X