சலோ பாலிவுட்- நயன்!

அட, சும்மனாங்காட்டியும் சொல்லல... விஷயத்தைச் சொன்னவர் நயன்தாராவேதான்.
அப்படி என்னதான் சொன்னார்?
சந்திரமுகி வெளியானபோதே பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் தென்னகப் படங்கள்தான் முக்கியம் என தமிழிலும் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது ஓரளவு திருப்தியாக இங்கு நடித்துவிட்டதாகவே நினைக்கிறேன். குசேலன், சத்யம் வெளியாகட்டுமென்று காத்திருக்கிறேன்.
இப்போதைக்கு ஒரேயொரு இந்திப் படத்துக்கு சம்மதம் சொல்லும் எண்ணம் உள்ளது. ஆனால் தமிழ், தெலுங்குப் படங்களுக்குத்தான் முதலிடம்.
அடுத்து தமிழில் மூன்று பெரிய படங்கள் நடிக்கவிருப்பதால், அந்தப் படங்களுக்கான தேதிகள் பாதிக்காத வகையில், இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகு இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். மற்ற விவரங்களைப் பிறகு சொல்கிறேன், என்கிறார்.
பாலிவுட்காரர்கள் யாரையுமே மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பவர்களாயிற்றே... அவர்களிடம் இந்த நிபந்தனையெல்லாம் எடுபடுமா?


Click it and Unblock the Notifications











