ஷபானா ஆஸ்மிக்கு 59 வயது!

இன்று ஷபானா ஆஸ்மிக்கு 59 வயது. ஆனால் இன்று அவர் மும்பையில் இல்லை. மாறாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடக்கும் நாடகத்தில் கலந்து கொள்வதற்காக போயுள்ளார்.
தனது பிறந்த நாள் குறித்து ஷபானா ஆஸ்மி கூறுகையில், எனது கணவர் ஜாவேத் அக்தர் ஒரு இடத்தில் உன்னால் இருக்க முடியாது. உனது குடும்பத்தினர் நாடோடிக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கிண்டலடிப்பார். காரணம், நான் ஒரு இடத்தில் இருக்க மாட்டேன். டிராவிலிலேயேதான் இருப்பேன்.
இன்று காத்மாண்டுவில் இருக்கிறேன். நாளை தென் ஆப்பிரிக்காவுக்குப் போகிறேன். பின்னர் டாக்கா செல்கிறேன். 28ம் தேதிதான் மும்பை திரும்புகிறேன்.
இந்த முறை எங்களது வீட்டில் ரம்ஜான், எனது பிறந்த நாள் என எந்தக் கொண்டாட்டமும் கிடையாது. காரணம், எனது நெருங்கிய தோழியின் கணவர் இறந்து விட்டார். அந்த சோகத்தில் இருக்கும் தோழிக்காக இந்தக் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டோம் என்கிறார் ஷபானா.


Click it and Unblock the Notifications











