பத்மப்ரியாவின் 'ஸ்டிரைக்கர்'

By Staff

Padmapriya
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வாய்ப்புகள் குறைந்து போய் விட்ட நிலையில் அடுத்ததாக இந்திக்குப் பாய்கிறார் பத்மப்ரியா.

மிருகம் கடைசியாக பத்மப்ரியா தமிழில் நடித்த படம். அப்படம் தொடர்பாக பல சர்ச்சைகளில் சிக்கினாலும், நன்றாக நடித்திருந்தார் என்று பாராட்டப்பட்டார் பத்மப்ரியா.

இதையடுத்து அர்ஜூனுடன் இணையும் வாய்ப்பு வந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கிளாமரான டிரஸ் போட மாட்டேன் என வம்பு பிடித்ததால் படத்திலிருந்து தூக்கி விட்டனர்.

இந்த நிலையில்தான் இந்தியில் ஒரு படம் அவரைத் தேடி வந்துள்ளது. ஸ்டிரைக்கர் என பெயரிடப்பட்டுள்ள புதிய இந்திப் படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளார். சித்தார்த் (பாய்ஸ் சித்தார்த்தே தான்) தான் இப்படத்தின் நாயகன். சந்தன் அரோரா படத்தை இயக்கவுள்ளார்.

பத்மப்ரியாவுக்கு இந்தி நன்றாகத் தெரியுமாம். இதனால் இப்படத்தில் தனது சொந்தக் குரலில் பேசி அசத்தப் போகிறாராம் பத்மா.

பாலிவுட் ஹிட் ஆகி விட்டால் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் பத்மப்ரியா.

கிளாமர் காட்ட மாட்டேன் என்று கூறி அர்ஜூன் படத்தை இழந்த பத்மப்ரியா, கிளாமர் சமுத்திரமான பாலிவுட்டில் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் சிலர் கேட்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X