நாடு திரும்பினார் பார்வதி ஓமனக்குட்டன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்து கொண்ட பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்பாராத வகையில் ரஷ்ய அழகி சுகினோவா பட்டத்தை தட்டிச் சென்றார். முதல் ரன்னர் அப் ஆக தேர்வானார் பார்வதி.
நடுவர்களின் பாரபட்சமான நடவடிக்கையால்தான் தான் பட்டத்தை இழந்ததாக பார்வதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பார்வதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி கிளம்பிச் சென்றார் பார்வதி.
More from Filmibeat
அழகிப் போட்டி இந்தியா பார்வதி ஓமனக்குட்டன் மிஸ் வேர்ல்ட் 2008 beauty pegeant miss world 2008 parvathy omanakuttan


Click it and Unblock the Notifications











