அய்யோ... வேண்டாம் தெலுங்கு!-அலறும் பூனம்

By Staff

Poonam
தெலுங்குப் படவுலகம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் கோலிவுட்டுக்கு விரும்பி வந்தேன் என போல்டாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் சோவல் நாயகி பூனம் பாஜ்வா.

இதென்ன கதை என்கிறீர்களா... கதை இல்ல.. நிஜம்தான்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து இப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கிறார் பூனம்.

அவர் கூறுகையில்,

"ஆரம்பத்தில் தமிழில் நடிக்கத்தான் ஆசைப்பட்டேன். நான் வசித்தது ஹைதராபாத்தில்தான் என்றாலும் தமிழ் படங்கள்தான் அதிகம் பார்பேன். 12ம் வகுப்பு முடித்த கையோடு தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் மறுத்தேன். ஆனால் தமிழ் வாய்ப்புகள் தள்ளிப் போனதால் ஒப்புக் கொண்டேன்.

நாகார்ஜுனாவுடன் பாஸ் ஐ லவ் யூ படத்தில் நடித்தேன். இன்னும் சில படங்களில் நாடித்தாலும், பெரிதாக திருப்தி தரவில்லை.

அப்போதுதான் பொல்லாதவன் பட வாய்ப்பு வந்தது. சில காட்சிகளில் நடித்த பிறகு அந்தப் படத்திலும் தொடர முடியவில்லை. பின்னர் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். இந்தப் படம் எனக்கு பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

இயக்குநர் ஹரியும் சரி, என் ஹீரோ பரத்தும் சரி அற்புதமான மனிதர்கள். இந்த மாதிரி இனிய அனுபவம் என்று சொல்லிக் கொள்ள தெலுங்கில் ஒன்றுமே இல்லை. அதனால்தான் எனக்கு தமிழ்ப் படவுலகம் பிடித்திருக்கிறது.

இப்போது ஜீவனுடன் சரவெடி, ஜீவாவுடன் தெனாவட்டு உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறேன், என்கிறார் பூனம்.

தெலுங்குப் படங்களில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டால், இப்போதைக்கு நடிப்பதாக இல்லை. முடிந்தவரை நடிக்காமலிருக்கவே முயற்சிக்கிறேன் என்றார்.

அவ்வளவு நோகடிச்சிட்டாங்களா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X