மாதவன் ஜோடி ப்ரியாமணி!

மணிரத்னம் இயக்கும் ராவணாவில் நடிக்கும் அவர், இப்போது மேலும் ஒரு தமிழ்ப் படம் ஒப்புக் கொண்டுள்ளார். அதுவும் கதாநாயகிகளின் போக்கை கடுமையாகச் சாடும் தங்கர் பச்சான் இயக்கும் படத்தில்.
அய்ங்கரன் இண்டர்நேனல் தயாரிக்கும் இந்தப் படத்தில் இரு நாயகர்கள். ஒருவர் சத்யராஜ், மற்றொருவர் மாதவன். இன்னும் பெயரிடப்படவில்லை.
மாதவனின் தந்தையாகத்தான் இதில் சத்யராஜ் நடிக்கிறார்.
மாதவனுக்கு ஜோடி ப்ரியாமணி. இருவரும் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
'இந்தப் படத்தின் கதை பற்றியெல்லாம் நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் தமிழ் சினிமா மீது அக்கறை கொண்டவர்கள் எடுக்கும் படம் இது. ஒரு நல்ல படம் கொடுப்பது எப்படி என்பதை ஒன்பது ரூபாய் நோட்டு படத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். அவர்களிடம் கதை கேட்கலாமா... கால்ஷீட் கொடுத்துவிட்டேன். மாதவனுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்கிறார் ப்ரியாமணி.
அவார்டு நடிகையானதுமே, பேச்சு இலக்கியவாதி ரேஞ்சுக்கு போயிடுச்சே!


Click it and Unblock the Notifications











