மல்லுக்கட்டும் ரம்யா கிருஷ்ணன்!!

ஆடின காலும் பாடின வாயும் எப்போதுமே சும்மா இருக்காது, என்பதை நிரூபிக்க இதோ இன்னும் ஒரு உதாராணம்.
திருமணமானதும் நடிக்க மாட்டேன் என அறிவித்து, குழந்தைப் பெற்று கொஞ்ச நாளானதும் மீண்டும் நடிப்பாசையோடு கோடம்பாக்கத்தையே சுற்றி வரும் நடிகைகளின் நீண்ட பட்டியலில் தனக்கும் ஒரு இடத்தைக் கன்பர்ம் செய்துள்ளார் படையப்பா புகழ் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்.
ஏற்கெனவே சில டிவி சீரியல்களில் நடித்து வரும் ரம்யா இப்போது, பரத்-ப்ரியாமணி ஜோடியாக நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் ஆறுமுகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கூல் புரொடக்ஷன்ஸ் சார்பில் சித.செண்பக குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஏற்கெனவே 'பிடிச்சிருக்கு' படத்தைத் தயாரித்தவர் இந்த செண்பக குமார்.
தேவா இசையமைக்கிறார். பாடல்களை இயக்குநர் பேரரசுவும், பா.விஜய்யும் எழுதுகிறார்கள்.
பரத்துடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் ப்ரியாமணி. சின்னத் தளபதியோடு ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்குமா என்றால், நானும் சின்னப் பொண்ணுதானே, என முறைக்கிறார்.
கருணாஸ், இளவரசு, சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பரத்துடன் மல்லுக்கட்டும் வில்லியாக வருகிறாரம் ரம்யா கிருஷ்ணன்.
என்னடா இது காம்பினேஷன் இடிக்குதே என்கிறீர்களா...
இதற்கு ரம்யா கிருஷ்ணன் கூறும் பதில்,
கோடீஸ்வரியான என்னோடு, இட்லிக்கடை நடத்தும் பரத் மோதுவதுதான் ஹைலைட். படையப்பாவில் நீலாம்பரின்னா, இதில் மாலினி. முழுக்க முழுக்க நெகடிவ்வான கேரக்ட்னு சொல்லமுடியாது. கொள்கைப் பிடிப்புள்ள பவர்புல் பெண் வேடம். பரத்துக்கு கடுமையான சவால் தரும் வேடம்... என்கிறார்.
கூட்டி கழிச்சிப் பாருங்க... நம்ம கணக்கு கரெக்டா வரும் என்கிறார் படத்தின் இயக்குநரான அண்ணாமலை புகழ் சுரேஷ்கிருஷ்ணா.
தப்புக் கணக்காகாமல் இருந்தால் சரிதான்!


Click it and Unblock the Notifications











