ரிதிமா எதுக்கும் ரெடிமா!

கன்னடத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்து நடிப்பனுபவமும், திரையுலக சூட்சுமமும் தெரிந்தவர்தான் ரிதிமா. இதனால் தனது முதல் தமிழ்ப் படத்தில் நடித்து முடிப்பதற்கு அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.
கோதுமையால் செய்த பொம்மை போல மொழுமொழுவென இருக்கிறார் ரிதிமா. பூர்வீகம் பஞ்சாப் என்றாலும், டெல்லியில்தான் பிறந்தார், வளர்ந்தார்.
அங்கிருந்து முதலில் அவர் நுழைந்தது கன்னடத்தில். 12வது முடித்து விட்டு மாடலிங் பக்கம் திரும்பியவரை, அவரது அழகிய முகத்தால் கவரப்பட்டு, கன்னடத்திற்கு இழுத்து வந்து விட்டனர்.
ஒ மல்லிகே படம் மூலம் ஹிட் ஆனார் ரிதிமா. தொடர்ந்து பல கன்னடப் படங்கள் தேடி வர கன்னடத்துக் கிளியாக மாறிப் போனார். கன்னடத்திலும், ஒரியாவிலும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம் ரிதிமா.
தற்போது தமிழுக்கும் விசிட் அடித்துள்ளார் எங்க ராசி நல்ல ராசி படம் மூலமாக. இப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் எவர்கிரீன் முரளி. படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஆரின் மகன் விஷ்வா இன்னொரு நாயகன். ரிதிமாவின் அப்பாவாக எஸ்.வி.சேகர்.
கதைப்படி முரளி, விஷ்வாவை ரிதிமா மணப்பது போல போகிறதாம். படம் முழுக்கு சிரிப்புச் சூறாவளி விலா நோக சுழன்றடிக்கிறதாம்.
எப்படிப்பட்ட ரோல் பிடிக்கும் என்று ரிதிமாவிடம் கேட்டால், எந்த ரோலாக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை. மாடர்ன் கேர்ள், சேலை கட்டிய பாந்தமான கேரக்டர், அடாவடி, காமெடி, கிளாமர் என சகலத்திலும் நடிப்ேபன் என்கிறார் தைரியமாக.
இந்தப் படம் தவிர மூணாறு படத்திலும் ரிதிமாதான் ஹீரோயின். அதில் கவர்ச்சியிலும் கலக்கியுள்ளாராம். எங்க ராசி நல்ல ராசியிலும் கூட ரிதிமாவுக்கு ரிச்சான கவர்ச்சிக் காட்சிகள் வைத்துள்ளனராம்.
அழகிய முகம், நடிப்பனுபவம், கிளாமருக்கும் தயங்காமை என சினிமா நாயகிகளுக்கே உரிய தயார் நிலையில் இருக்கும் ரிதிமா, நயன்தாரா, திரிஷா போன்றோரை ஓரம் கட்டுவாரா...?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே.


Click it and Unblock the Notifications











